விஜய்க்கு 5வது இடம் கொடுத்து அவமானப்படுத்திய த்ரிஷா. ரசிகர்கள் ஆத்திரம்


அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனை கடந்த சில நாட்களாக அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் பிரச்சனையாக கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் நடிகை த்ரிஷா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடன் நடித்த ஐந்து ஹீரோக்களை வரிசைப்படுத்துமாறு அவரிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, அஜீத்துக்குத்தான் முதலிடம் என்று கூறி அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து கூறிய த்ரிஷா, சூர்யாவுக்கு இரண்டாவது இடமும், விக்ரமுக்கு மூன்றாவது இடமும், கமல்ஹாசனுக்கு நான்காவது இடமும் கொடுத்த த்ரிஷா, விஜய்க்கு ஐந்தாவது இடமே கொடுத்துள்ளார். இத்தனைக்கும் விஜய் த்ரிஷா நடித்த கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை.

த்ரிஷாவின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் த்ரிஷாவை மரியாதைக்குறைவான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். அதே வேளையில் அஜீத் ரசிகர்கள் த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஓய்ந்திருந்த அஜீத்விஜய் ரசிகர்களிடையேயான மோதலை மீண்டும் த்ரிஷா ஆரம்பித்து வைத்துவிட்டதாக நடுநிலையான ரசிகர்கள் கூறுகின்றனர்.