விருது வழங்கும் நிகழ்ச்சியில் எவரையும் கண்டுகொள்ளாத சந்தானம்: அதிர்ச்சியில் கோடம்பாக்கம்




நடிகர் சந்தானத்தின் போக்கு சமீபகாலமாகவே புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கிறது என்று பேசப்பட்டு வருகிறது.இதில் இன்னொரு சம்பவம் சேர்த்துக் கொள்க.
சமீபத்தில்  நடந்த விஜய் டீவி விருது வழங்கும் விழாவில் சந்தானத்துக்கு சிறந்த  நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.( கடந்த 5  வருடமாகவே அவருக்குத்தான் கொடுக்குராங்க…வேறு யாருக்கும் தரமாட்டாங்க அது வேற விசயம்). சொல்லி வைத்தார்போல அவரது பெயரை மேடையில் அறிவிக்கவும் அவர் விழா அரங்கினுள் நுழைந்தார். நேராக மேடை ஏறி விருதை பெற்றுக்கொண்ட அவர் விஜய் டீவிக்கு நன்றி  தெரிவித்துவிட்டு இறங்கியவர் தமிழ் முன்னனி நட்சத்திரங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு செல்கிறார் என்று பார்த்தால் கார் நிற்கும் இடத்திற்கு
சென்று அங்கிருந்து கிளம்பினார். இவ்வளவு நட்சத்திரங்கள் அங்கு அமர்ந்திருக்க ஒரு நாகரீகத்திற்காகவாது நலம் விசாரிப்பதுதானே முறை? ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
விசாரித்ததில் தனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் புறக்கணித்ததிலிருந்தே கடும் விரக்தியில் இருக்கிறராம் சந்தானம். அதனால்தான் இவங்க நட்பு நமக்கெதுக்கு என்ற முடிவுகு வந்த வர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று கோடம்பாக்கத்தினர் கிசுகிசுக்கின்றனர்.
எல்லோரையும் சிரிக்கவக்கிற அவ்ருக்குத்தான் எவ்வளவு சோகம்!!!