தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது கைது செய்யப்படுவதை தடுக்க புதிய ஒப்பந்தம்




தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் தாக்கி சிறைபிடித்து செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகில் சென்று மீன்பிடித்தால் தான் அதிக மீன்களை பெற முடிகிறது. ஆனால் மீன் வளம் உள்ள அந்த பகுதிக்கு வரக்கூடாது என்று சிங்கள கடற்படை தமிழகர்களை தினமும் விரட்டுகிறது.
எனவே எதிர் காலத்தில் கச்சத்தீவு பகுதியில் கட்டணம் செலுத்தி தமிழக மீனவர்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த யோசனையை தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.


தமிழக மீனவர்கள் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டுமானால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்ப்பது ஒன்று தான் தீர்வாக இருக்கும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளார். சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பான வழக்கு உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று வெளியுறவுத்துறை கூறி வருகிறது. இலங்கை வெளியுறவு மந்திரி பெரீஸ் அடுத்த வாரம் டெல்லி வர உள்ளார். அப்போது தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.