அரிமா நம்பி குறித்து இளையதளபதி அடித்த கமெண்ட்




கும்கி வெற்றிக்குபின் இவன் வேற மாதிரியில் சற்றே சறுக்கியிருந்தார் விக்ரம் பிரபு. இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில்ப்ரியா ஆனந்துடன் இவர் நடித்து நேற்று முந்தினம் வெளியான அரிமா நம்பி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதனிடையில் தன்னுடைய பிஸியான நேரத்திலும் அரிமா நம்பி படத்தை பார்த்து மனதார பாராட்டியுள்ளார் இளைய தளபதி விஜய். அரிமா நம்பி படம் ஃபஸ்ட் கிளாஸாக இருக்கிறது. படத்தை சூப்பராக இயக்கியிருக்கிறார் என்று ஏ.ஆர்.முருகதாஸிடம் புகழ்ந்து தள்ளியுள்ளாராம்.


இந்த விசயத்தை ஏ.ஆர்.முருகதாஸே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளா. அதுமட்டுமின்றி துப்பாக்கி படத்தின் போது விஜய்க்கு, ஏ.ஆர்.முருகதாஸ் துணை இயக்குனர்களில் ஆனந்த் சங்கரை தான் மிகவும் பிடிக்குமாம். இதையும் முருகதாஸே அறிவித்திருக்கிறார்.