கடந்த 5ந் தேதி இரவு 10 மணிக்கு வெளியான அஞ்சான் படத்தின் டீஸர் இதுவரை 12 லட்சத்திற்கும் மேல் பார்த்துள்ளனர். டீஸரின் இந்த வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள நேற்று தி பார்க் ஹோட்டல் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சூர்யா, லிங்குசாமி, எடிட்டர் ஆண்டனி, வசனகர்த்தா பிருந்தா பாரதி மற்றும் தனஞ்செயன் கோவிந்த் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு முதல் முறையாக சூர்யா தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். இதில் முக்கியமான சில கேள்விகள் உங்களுக்காக;-
1. நீங்களும், ஜோதிகாவும் எப்ப ஒன்னா நடிக்க போறீங்க?
ஜோதிகா நடிக்கிறது எனக்கு பிரச்சனை இல்ல, வீட்ல இரண்டு வாண்டுங்க இருக்காங்க அவங்க அனுமதிச்சா உடனே நடிக்கலாம்.
2. லிங்குசாமியிடம் மீண்டும் எப்ப வொர்க் பண்ணப்போறீங்க?
லிங்குசாமி சார் கூட நான் முதல் படத்துல இருந்தே வேலை செய்ய வேண்டியது சில காரணங்களால் அது தள்ளிக் கொண்டே போனது, இப்போ அஞ்சான் மூலம் அது நினைவாகியிருக்கிறது. நான் ரெடி, அவர் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க, அவர் எப்ப கால்ஷீட் கேட்டாலும் நான் தருவேன்…
3.பேஸ்புக், ட்விட்டரில் எப்ப இணைய போறீங்க?
இப்போ அஞ்சான் படத்தின் டீஸர் இந்த அளவுக்கு பெருசா இணையத்தில் ஓடியிருக்கு, இந்த ரெஸ்பான்ஸ் பார்த்தா சீக்கிரம் நான் பேஸ்புக், ட்விட்டரிலும் இணைந்துவிடுவேன், அதிலும் கலக்குறோம்.
கேள்விகள் முடிந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் சூர்யாவிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
