விரைவாக இ-டிக்கெட் பெற புதிய இணையதளம்: அறிமுகப்படுத்தியது ஐ.ஆர்.சி.டி.சி.




இணையதளம் வாயிலாக நெரிசலின்றி விரைவாகவும், எளிதாகவும் ரயில் டிக்கெட்கள் (-டிக்கெட்) பெற மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் ஒன்றை .ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை வழங்குகிறது. ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் (-டிக்கெட்) விற்பனையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (.ஆர்.சி.டி.சி)செய்து வருகிறது.
இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தே ரயில் பயணத்துக்கான டிக்கெட்டை உறுதி செய்ய முடிகிறது. இதன் காரணமாக கவுன்ட்டர்கள் முன் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக இணையதளம் வழியாக எளிதாக டிக்கெட் எடுப்பதையே பலரும் விரும்புகின்றனர்.
-டிக்கெட் விற்கும் அனுமதி ஏஜென்சிகளுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் காலை 10 மணி முதல் 12 மணி வரை -டிக்கெட் எடுப்பதற்கு கடும்போட்டி ஏற்படுகிறது.


குறிப்பிட்ட நேரத்திற்குள் -டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை பெறுவது என்பது பெரும் சவால் நிறைந்தது. மேலும் .ஆர்.சி.டி.சி. இணையதள செயல்பாட்டில் ஏற்படும் பிரச்னையாலும் சில நேரங்களில் டிக்கெட் எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னையைத் தவிர்ப்பதற்காக மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் ஒன்றை .ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாகவும், விரைவாகவும் -டிக்கெட்டை பயணிகள் எடுக்க முடியும்.
இனி ஜ்ஜ்ஜ்.ய்ஞ்ங்ற்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீ.ஸ்ரீர்.ண்ய் என்ற புதிய இணையதளம் வழியாக இடிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய வெப்சைட்ô ஜ்ஜ்ஜ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீ.ஸ்ரீர்.ண்ய்-க்கு பதிலாக இந்த புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த புதிய இணையதளம் வேகமாக செயல்படக்கூடியது என்பதால் டிக்கெட் பெற காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த புதிய இணையதளம் பற்றிய தகவல் .ஆர்.சி.டி.சி. இணையதளத்தை வழக்கமாக பயன்படுத்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது என .ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் -டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். ஏற்கெனவே உள்ள -டிக்கெட் பெறும் இணையதளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் கையாளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வசதியின் கீழ், கடந்தாண்டு செப்டம்பரில் தான் அதிகபட்சமாக 5 லட்சத்து 71 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன என .ஆர்.சி.டி.சி. தெரிவித்தது.
சராசரியாக 4.5 லட்சம் டிக்கெட்டுகள் இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.