லிங்கா’ படத்தை புறக்கணிப்போம். விஜய் ரசிகர்களின் திடீர் அறிவிப்பால் பெரும் பரபரப்பு






கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கு என்ற மோதல் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. இந்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்த ‘குமுதம்’ வார இதழே இந்த விஷயத்தை மறந்துவிட்டது.ஆனால் விஜய் மற்றும் ரசிகர்கள் இன்னும் இதுகுறித்து மோதிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் இன்று ஒரு பேட்டியில் ‘சூப்பர் ஸ்டார் பட்டம் அஜீத்துக்குத்தான் நியாயமாக பொருந்தும்’ என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை ஆத்திரமூட்டியுள்ளது.


‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் என்பது ஒருவர் எடுக்கும் முடிவு அல்ல. குமுதம் இதழில் லட்சக்கணக்கான வாசகர்கள் ஓட்டுபோட்டு வாங்கிய பட்டம். இவ்வாறு வாங்கிய பட்டத்தை கே.எஸ்.ரவிகுமார் அவமானப்படுத்தியதுபோல் கருத்து கூறியதை ஏற்க முடியாது என்று சமூக வலைத்தளங்க்ளில்
விஜய் ரசிகர்கள் கொந்தளித்து கருத்து கூறி வருகின்றனர். மேலும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘லிங்கா’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.


இதனால் ‘லிங்கா’ படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. கே.எஸ்.ரவிகுமார் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் இதற்கும் ‘லிங்கா’ திரைப்படத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் லிங்கா படக்குழு விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனவே முடிந்தது போல் தெரிந்த ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்த பிரச்சனை தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது