கத்தி படத்தில் அஜித்







துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் கத்தி படத்தில் முருகதாசுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. தற்போது இந்த படம் பற்றி மிகவும் சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கத்தி படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு காட்சியில் முக்கியமான சினிமா பிரபலம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முதலில் இந்த கேரக்டருக்கு பாலிவுட் நடிகர்களை கேட்கலாம் என்று யோசித்து வந்த முருகதாஸுக்கு, ‘ஏன் அஜித்தை கேட்ககூடாது?’ என்று திடீரென்று ஒரு யோசனை உதித்துள்ளது. உடனே விஜய்யிடம் அனுமதி வாங்கி, தற்போது அஜித்திடம் கேட்கலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.