அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம். நடிகர்களுக்கு மட்டும் அல்ல நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் அளிக்கப்படுகிறது.
ஆனால் நடிகர்களுடன் ஒப்பிடுகையில் நடிகைகளின் சம்பளம் மிகவும் குறைவு தான். இந்நிலையில் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார், யார் என்பதை பார்ப்போம்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபலமாக இருக்கும் நயன்தாரா படம் ஒன்றுக்கு ரூ. 2.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர் நயன்தாரா தான். நயன்தாராவை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை அனுஷ்கா.
அவர் தெலுங்கில் நடித்து வரும் ருத்ரம்மா தேவி படத்திற்கு ரூ.2.5 கோடி வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் நடித்து வருகிறார் தமன்னா. அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஆகடு படத்தில் நடிக்க ரூ.1.75 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து அவ்வப்போது தமிழ் படங்களில் தலையை காட்டிய இலியானா தற்போது பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். அவர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி பெற்றுள்ளார். காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு ரூ.75 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கினார்.
தற்போது அவர் தனது சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வரும் த்ரிஷா படம் ஒன்றுக்கு ரூ. 80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுகிறார். தெலுங்கில் அசைக்கமுடியாத டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா படம் ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வாங்கி வந்தார்.
ஆந்திராவில் தொடர் ஹிட் படங்களில் நடித்த அவர் தற்போது அவரது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளார். தெலுங்கு படமான கப்பார் சிங் வெற்றி பெற்ற பிறகு ஸ்ருதி ஹாஸன் டோலிவுட் படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார்.
முன்னதாக அவர் ரூ.75 லட்சம் பெற்றார். அமலா பால் தெலுங்கு படமான வஸ்தா நீ வேணுகா படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.
தெலுங்கு படங்களில் நடிக்க அண்மை காலமாக ஹன்சிகா ரூ.80 லட்சம் வாங்குகிறாராம். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் படம் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் பெறுகிறாராம். லட்சுமி மேனன் புதிய படங்களில் நடிக்க ரூ. 40 லட்சம் கேட்கிறாராம்