தல உபதேசம் ஊருக்கு மட்டும் தானா..! தனக்கு இல்லையா?


நடிகர் அஜித் தன்னுடைய சுயவிருப்பத்திற்காக ஏதாவது ஒரு காரியத்தை செய்து விட்டு, யாரவது கேட்டால் சமூக விழிப்புணர்வு, சமுதாய சீர்திருத்தம் என பப்ளிசிட்டிக்காக போலியாக தன்னுடைய உதவியாளர்கள் மூலம் செய்திகளை பரப்பிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தன் மேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்த தன்னுடைய ரசிகர்களையே முட்டாள் எனக்கூறி ரசிகர் மன்றங்களை களைத்தவர் தான் இந்த அஜித். ஆனாலும் ரசிகர்கள் அஜித்தின் மேல் வைத்துள்ள மதிப்பு இன்னும் குறையவில்லை.  ‘தமிழ் நாட்டின் தல’ ‘இது தமிழ் நாடு இல்ல, தல நாடுஎன்றெல்லாம் கூறி இன்னும் அஜித்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

அஜித் ஒரு ரேஸ் பிரியர் என்பது ஊரறிந்த விஷயம். எங்காவது ரேஸ் நடந்தால் வண்டியை எடுத்துக்கொண்டு முதல் ஆளாக நிற்பார். ரேஸ் ஆசை தீரும் வரை சினிமாவை கொஞ்ச காலம் திரும்பிப்பார்க்க மாட்டார். இவரை நம்பி பணம் போட்டு, தற்கொலை செய்யும் அளவிற்கே சென்றார் ஆஞ்சநேயா படத்தின் தயாரிப்பாளர். இந்த விசயங்களை பெரும்பாலானோர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித் பூனே வரை பைக்கில் பயணம் செய்தார். இதை ஊடகங்களும் ஆக.. ஓகோ..! ‘ரியல் ஹீரோ’, ‘ரியல் மேன் அஜித்என புகழ்ந்து தள்ளினர். பயணம் செய்து முடித்த பின்எல்லோரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர் பயணம் மேற்கொண்டேன்எனக் கூறி பப்ளிசிட்டி தேடிக்கொண்டார். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்த அஜித், தன்னுடைய படங்களில் ஹெல்மெட் போடமால் வாகனம் ஓட்டியுள்ளார். இவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இவருடைய ரேஸ் பேராசையை நிறைவேற்றிக்கொள்ள பைக்கில் பயணம் செய்து விட்டு சமூக விழிப்புணர்வு எனக்கூறி ரசிகர்களை முட்டாளாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இவருக்கு ஏதாவது ஆனால் தயாரிப்பாளர் குடும்பம் முதல், அதில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் குடும்பம் வரை அனைவரும் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும். ஆனால் யார் எப்படி போனால் நமக்கென்ன ஹீரோயிசமும் பப்ளிசிட்டியும் தான் முக்கியம் என நினைக்கின்றார் அஜித். மற்ற நடிகர்கள் பப்ளிசிடிக்காக, வாயை திறந்து ஏடாகூடமாக எதையாவது உளறிக் கொட்டி மாட்டிகொள்வார்கள். ஆனால் வாயே திறக்காமல் பப்ளிசிட்டி தேடிக்கொள்வது நடிகர் அஜித் மட்டுமே. இவருடைய இந்த ராஜதந்திர கலையை அறியாத மீடியாக்களும், அஜித் அதை செய்தார்.. இதை செய்தார்.. ஜிம்முக்கு போனார்எடையை குறைத்தார்வண்டி ஓட்டினார்ஆகாயத்தில் பறந்தார் என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள்.
அஜித்தின் செயல்களை பார்க்கும் போது ஒரு குட்டிக் கதை தான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு மரத்தடியில் சாமியார் பக்தர்களிடம் தொன தொனவென எதையாவது பேசி உபதேசம் செய்துகொண்டே இருப்பார். ஆனால் இவர் செய்யும் உபதேசத்தை யாரும் காதில் கூட வாங்க மாட்டார்கள். ஒரு நாள் அந்த வழியாக போன வழிப்போக்கன் சாமியாரின் நிலையறிந்து காதில் ஏதே முனுமுனுத்துவிட்டு சென்றுள்ளான்.

  அதை அப்படியே சாமியாரும் பின் பற்றியுள்ளார், அன்று முதல் சாமியாரை தரிசிக்க ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். அவர் பேசும் வார்த்தைகளை கேட்க தவம் கிடந்துள்ளனர். அப்படி என்ன தான் வழிப்போக்கன் கூறினான் என கேட்கிறீர்களா, ” சாமி நீ யாரிடமும் பேசாமல் இரு, பிறகு என்ன நடக்கிறது என்று பார்என கூறிவிட்டு சென்றுள்ளான் வழிப்போக்கன். சாமியும் பேசாமல் இருந்துள்ளார், அவரை தரிசிக்க வந்த பக்தர்களே, சாமி கடவுளிடம் பேசிக்கொண்டிருகின்றார், நித்திரையில் இருக்கின்றார், உலகிற்கு வரும் ஆபத்தை தடுத்துக் கொண்டிருகின்றார் எனக்கூறி ஒரே நாளின் சாமியாருக்கு பப்ளிசிட்டி தேடித்தந்து விட்டனர்.
அஜித் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய காட்சி