கடந்த சில தினங்களுக்கு முன்
அஜித்தின் ரசிகர்கள் நடத்தும் ரசிகர் பக்கம் அதிகாரப்பூர்வமாக
பேஸ்புக்கால் அறிவிக்கப்பட்டது. இந்த விஷயம் அஜித்
ரசிகர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியது, கிட்டத்தட்ட 13 லட்சம் லைக்குகளை வைத்திருந்த
இந்த பக்கம் தற்போது 15 லட்சத்தை
தாண்டி இன்னும் லைக்குகளை அள்ளிக்
கொண்டிருக்கிறது.
இந்த நல்ல செய்தி ஒருபுறம்
இருக்க அஜித்தின் இந்த அதிகாரப்பூர்வ பக்கத்தை
திரும்ப பெற வைக்க விஜய்
ரசிகர்கள் முயற்சி செய்து வருவதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பக்கம் அஜித்தின்
ரசிகர்கள் நடத்துவது இது அஜித்தின் பக்கம்
அல்ல ஆகையால் உடனே அதிகாரப்பூர்வமான
அஜித் பக்கம் என்ற டிக்
மார்க்கை உடனே திரும்ப பெற
வேண்டும் என்று கூறிவருகிறார்களாம். இதே
போல விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கமும் விஜய்யின் ரசிகர்களால் நடத்தப்படுவதால் அஜித்தின் இந்த பக்கத்திற்கு எந்த
பாதிப்பும் வராது என்று நம்புவோமாக…