விஜய் படங்களில் இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்திய கத்தி








ஜில்லா படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் கத்தி. .ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.சமந்தா நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஐங்கரன் இண்டர் நேஷனலுடன் லைக்கா புரொடக்சனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
 தீபாவளி வெளியீடாக ரெடியாகிவரும் இந்த படத்தின் முதல் டீஸர் கடந்த 22ம் தேதி வெளியானது. டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாம். இதுவரை கத்தி டீஸரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனராம். இதுவ்ரை விஜய் படங்களில்லேயே அதிகமான ஹிட் அடித்த டீஸர் கத்தி என தெரிகிறது.

இந்த முன்னோட்டப் படமும், சுவரொட்டி வடிவமைப்பும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டிவி விளம்பரத்தை முழுவதுமாக தழுவி எடுக்கப்பட்டது என்று கிசுகிசுக்கள் கிளம்பியபோதும், விஜய் ரசிகர்கள் தந்த உற்சாகமான ஆதரவே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.